Love you my wife - என்னை நேசிக்கும் என் உயிரே நீ - K Karthik Raja Lyrics

 **பல்லவி**


என்னை நேசிக்கும் என் உயிரே நீ

என் உலகம் முழுதும் நீ

தாயாய் மாறி தழுவும் நீ

தெய்வமாய் காக்கும் நீ

என் மூச்சு ஒளிர காரணம்

எல்லாமே நீ… எல்லாமே நீ



துன்பம் வந்தால் தோள்கொடுப்பாய்

தளர்ந்தால் மனம் தூக்கிடுவாய்

விழி மூடும் முன் என் வாழ்வில்

விளக்காய் நீயே எரிந்திடுவாய்


**சரணம் 1**

என்னை நேசிக்கும் மனைவியாக

அம்மாவாய் நீ மாறினாய்

என் வாழ்வை காக்கும் துர்கையாய்

ஒவ்வொரு நாளும் நிறைந்தாய்

என் நிழலாய் நீ நடக்க

என் பாதை நேராகியது

என் உள்ளம் ஒளிர்ந்திட

உன் அன்பே காரணமானது


எல்லாமே நீ… எல்லாமே நீ ( chanting twice )


**சரணம் 2**

லவித்ரா, லிவியா என

இரு தேவதைகள் தந்தாய்

என் வானில் பிறந்த

இரு நட்சத்திரங்களாய் ஆனாய்

தாய் சிரிப்பில் உலகம் தெரிந்தது

அப்பா மனம் நிறைந்தது

உன் மடியில் என் சொர்க்கம்

நாள்தோறும் மலர்ந்தது



எல்லாமே நீ… எல்லாமே நீ ( chanting twice )


**சரணம் 3**

நாள் தோறும் சேவை செய்தாய்

நான் கேட்கும் முன் அறிந்தாய்

என் அன்பால் எப்படிச்

செலுத்துவேன் என்று தெரியவில்லை

உடல் நலன் சாய்ந்த காலம்

உயிர் சோர்ந்த நிமிடம்

சாவித்திரி போல

மண்ணுக்கு மீண்டும் இழுத்தாய் என்னை


**சரணம் 4**

உன் நம்பிக்கை என் பலம்

உன் கண்கள் என் தைரியம்

நேரம் மாறினாலும்

மாறாதது உன் இதயம்

என் வாழ்நாள் முழுவதும்

சொல்லிக்கொண்டே இருப்பேன்

உன் காதில் மெதுவாக

I love you… I love you…Rekha


**முடிவு பல்லவி**

என்னை நேசிக்கும் என் உயிரே நீ

என் உலகம் முழுதும் நீ

தாயாய், தெய்வமாய், துணையாக


எல்லாமே நீ… எல்லாமே நீ ( chanting twice )

Vinayagar Shield of Success - Ganapathi Power Chant - Ganapathi Supreme Protection - K KARTHIK RAJA's English Lyrics

 Vinayagar Shield of Success - Ganapathi Power Chant - Ganapathi Supreme Protection - K KARTHIK RAJA's English Lyrics Vinayagar shield f...